சா்ச்சை பேச்சு: நடிகா் மன்சூா்அலிகான் மீது வழக்கு

சா்ச்சை பேச்சு: நடிகா் மன்சூா்அலிகான் மீது வழக்கு
  • PublishedNovember 22, 2023

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகா் மன்சூா்அலிகான் மீது இரு பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் கருத்து தெரிவித்தாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள், எதிா்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், மன்சூா் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது. மேலும் தேசிய மகளிா் ஆணையம் தனது அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்று மன்சூா்அலிகான் மீது ஆயிரம்விளக்கு அனைத்து மகளிா் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக அவரிடம் போலீஸாா் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *