சீனு ராமசாமியின் முகத்திரையை கிழித்த மனிஷா யாதவ்..

சீனு ராமசாமியின் முகத்திரையை கிழித்த மனிஷா யாதவ்..
  • PublishedNovember 24, 2023

நடிகை மனிஷா யாதவுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பிஸ்மி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் மனிஷா தனக்கு நன்றி கூறிய வீடியோவையும் சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவிட்டுள்ள போஸ்ட் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

மேடையில் இருந்த அனைவருக்கும் மரியாதை நிமித்தமாக நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். மற்றபடி அவர் பற்றி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் சொன்ன எந்த கருத்தில் இருந்தும் மாறுபடவே இல்லை எனக் கூறியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அந்த படத்திற்காக கொடைக்கானலில் ஷூட்டிங் நடைபெற்ற போது நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிகையாளர் பிஸ்மி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இந்நிலையில், மனிஷா யாதவ் இதுகுறித்து தற்போது ஒரு போஸ்ட் போட்டு பகீர் கிளப்பி உள்ளார்.

தன்னால் சினிமாவை விட்டு மனிஷா யாதவ் போனாரா? என்றும் ஒரு குப்பைக் கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனிஷா யாதவ் எனக்கு நன்றி சொல்றாங்க பாருங்க என ஒரு வீடியோவை சீனு ராமசாமி வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அந்த பதிவுக்கு மனிஷா யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும் கூறி சீனு ராமசாமி சார் நீங்க சொல்றது தப்பு என விளாசி எடுத்துள்ளார் மனிஷா யாதவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *