என்ன விஜய்யும் குற்றவாளியா? பேரதிர்ச்சி செய்தி! ஜோதிகா கூறியது என்ன?

என்ன விஜய்யும் குற்றவாளியா? பேரதிர்ச்சி செய்தி! ஜோதிகா கூறியது என்ன?
  • PublishedNovember 24, 2023

நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து சமீப நாட்களாக பேச்சுக்கள் எழுந்திருக்கும் சூழலில், விஜய்யுடன் நடிப்பது அவ்வளவு Comfartable கிடையாது என ஜோதிகா சொன்னார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அந்த பேட்டியின் நெறியாளர் பிஸ்மியிடம், ‘சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வைரலானது. அதில் ஜோதிகாவிடம், நீங்கள் யாருடன் நடிக்கும்போது Comfartableஆக ஃபீல் செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவரோ மாதவன், சூர்யா, அஜித் என சொல்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த பிஸ்மி, “ஜோதிகா சொன்னதிலிருந்து நீங்களே புரிந்துகொள்ள வேண்டியதுதான். அவர் இதுவரை எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் என்ற லிஸ்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இந்த மூன்று பேரை தவிர்த்து ஜோதிகாவுடன் நடித்தவர்கள் அவரிடம் அத்துமீறி, தவறாக நடந்துகொள்ள முயன்றார்கள் என்றுதான் நாம் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

குஷி படத்தில் விஜய்யுடன் ஜோதிகா நடித்தார். எனவே அவரது இந்தக் கூற்றில் குற்றவாளியாக்கப்படுவது விஜய்யும்தான். இதை நாம் பகுத்து பிரித்து பார்ப்பதால் விஜய்யை பற்றி இப்படி சொல்கிறார்களே என நம் மீது அவரது ரசிகர்களுக்கு கோபம் வரும்.

ஆனால் அவர்கள் ஜோதிகா மிதுதான் கோபப்பட வேண்டும். ஏனென்றால் இந்த மூன்று பேர்தான் தனக்கு கம்ஃபர்டபிள் என்று அவர் சொல்கிறார். எனில் மற்றவர்கள் ஜோதிகாவிடம் எதோ செய்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்” என்றார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த கடந்த சில நாட்களாகவே பேச்சுக்கள் தொடர்ந்து தலை தூக்கியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர்களில் கம்ஃபர்ட் என்றால் மாதவன், சூர்யா, அஜித்தான் என்று சொல்லியிருக்கிறார் ஜோதிகா. இந்த லிஸ்ட்டில் அவர் விஜய்யை சேர்க்காததால் பல எண்ணங்கள் எழுகின்றன என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *