ரஷ்மிகாவுக்கு காதல்… ரன்பீர் கபூர் கன்ஃபார்மே பண்ணிட்டாரே…

ரஷ்மிகாவுக்கு காதல்… ரன்பீர் கபூர் கன்ஃபார்மே பண்ணிட்டாரே…
  • PublishedNovember 24, 2023

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பாலகிருஷ்ணாவின் ரியாலிட்டி ஷோவில் நடைபெற்றது.

அதில், நடிகர் பாலகிருஷ்ணா, ரன்பீர் கபூர் இருவரும் சேர்ந்துக் கொண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டுக் கொடுத்து ராஷ்மிகா மந்தனாவை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், இருவரும் காதல் பறவைகள் தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ரன்பீர் கபூர் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டுக் கொடுத்து ராஷ்மிகா மந்தனாவிடம் பேச வைக்க, வெட்கப்பட்டுக் கொண்டே ராஷ்மிகா பேசும் காட்சிகள் ரசிகர்களை கன்ஃபார்மே செய்ய வைத்துள்ளது.

பாலகிருஷ்ணா நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா பங்கேற்ற நிலையில், விஜய் தேவரகொண்டா போனில் பேசிக் கொண்டிருக்கும் போது நீங்க யாரை லவ் பண்றீங்க என ராஷ்மிகாவிடம் கொக்கிப் போட நான் பாலய்யா சாரை லவ் பண்றேன் என ராஷ்மிகா மந்தனா சொல்ல, உடனடியாக ஐ லவ் ராஷ்மிகா என பாலய்யா ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் அரங்கேறி உள்ளன.

ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் பேசும் போது செம க்யூட்டாகவும் குசுகுசுவென காதலருடன் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கும் போது, அதை குறிப்பிட்டு ரன்பீர் கபூர் அவங்களோட கன்னத்துல பிளஷ் வருது பாருங்க என கன்னம் சிவக்கிறது என்பதை நோட் பண்ணி சொல்லி உறுதியே செய்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *