முதல் நாள் பாடசாலைககுச் செல்லும் மேகனா ராஜின் மகன்

முதல் நாள் பாடசாலைககுச் செல்லும் மேகனா ராஜின் மகன்
  • PublishedJune 1, 2023

2009ஆம் ஆண்டு பெண்டு அப்பராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானார் நடிகை மேக்னா ராஜ்.

தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்திருந்தார். பின் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புக்கள் குறையத் தொடங்கின.

இந்நிலையில் இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் பின்னரும் மேக்னா ராஜ் படங்களில் நடித்தார். இதுவரையில் 22 படங்களில் சிரஞ்சீவி சர்ஜா நடித்துள்ளார். இறுதியாக இவர் நடித்த திரைப்படம் ஷிவார்ஜூனா.

இந்நிலையில் கடந்த 2020 ஜூன் 06ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலி வந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

தனது 39ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார் சிரஞ்சீவி. சிரஞ்சீவி இறந்தபோது, மேக்னா வயிற்றில் குழந்தையுடன் இருந்தார்.

தன் முதல் குழந்தையைக் கூட பார்க்காமல் சிரஞ்சீவி உயிரிழந்துவிட்டார். கணவர் இறந்த சில நாட்களிலேயே அவரது புகைப்படத்தின் முன்பு அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது.

கணவர் இறந்த சோகத்திலிருந்த மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது. அவருக்கு ராயன் ராஜ் சர்ஜா என்று பெயரிட்டுள்ளனர்.

குழந்தையாக இருந்த ராயனுக்கு தற்போது பள்ளி செல்லும் வயதும் வந்துவிட்டது. பள்ளியில் சேர்க்கப்பட்ட ராயன் முதல் நாள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு தனது தந்தையின் புகைப்படத்துக்கு முன்பு ஆசீர்வாதம் பெற்று சென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *