நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி கல்லாக்கட்டிய சில திரைப்படங்கள்!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி கல்லாக்கட்டிய சில திரைப்படங்கள்!
  • PublishedJune 1, 2023

பாக்ஸ் ஆபீஸ் நாயகன் என வர்ணிக்கப்படுபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிப்பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக சாதனை புரியும்.

அவ்வாறு விஜய் நடிப்பில் வெளியாகி, வசூல் ரீதியாக வெற்றிப்பெற்ற சில படங்களை பார்கலாம்.

2019ல் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படமான பிகில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று சுமார் 250 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில் விஜய் இப்படத்திற்கு 80 கோடியை சம்பளமாக பெற்றாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021ல் விஜய் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் மாஸ்டர். 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 300 கோடி வசூலை பெற்று தந்தது. ஆகையால் இப்படத்திற்கு சுமார் 100 கோடியை சம்பளமாக பெற்றாராம் விஜய்.

விஜய் - கோபிசந்த் படத்தை தயாரிப்பது யார்? ஆச்சரியமான தகவல்..! - News -  IndiaGlitz.com

அதற்குப்பின் நெல்சன் இயக்கத்தில் 2022-ல் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் பீஸ்ட். இப்படம் சுமார் 250 கோடி வசூலை பெற்று தந்தது. இப்படத்தில் விஜய்யின் சம்பளம் 115 கோடியாம்.

அதன்பின் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய் 125 கோடியை சம்பளமாக பெற்றாராம். இவ்வாறு தன்னுடைய படத்தின் வெற்றிக்கு தகுந்தவாறு தன் சம்பளத்தை ஏற்றுக் கொண்டே போகிறார்.

தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளிவர இருக்கும் லியோ படத்தில் இவரின் சம்பளம் 150 கோடியாம். அதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68 படத்திற்கு சுமார் 200 கோடி சம்பளமாக பெறுவார் என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *