நடிகை த்ரிஷாவின் செக்கண்ட் இன்னிங்ஸ் : ”இனி ஆட்டம் வெறித்தனமா இருக்குமாம்”

நடிகை த்ரிஷாவின் செக்கண்ட் இன்னிங்ஸ் : ”இனி ஆட்டம் வெறித்தனமா இருக்குமாம்”
  • PublishedJune 1, 2023

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக தனது மார்க்கட்டை உயர்த்தி இருக்கிறார். தற்போது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக முன்னகர்த்தி வருகிறார்.

அந்தவகையில் தற்போது 14 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இந்த படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இதற்கிடையே நகடிர் தனுஷின் 50 ஆவது படத்திலும், அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்திலும் திரிஷா தான் நடிப்பதற்கு அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இவ்வாறாக  எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவருடைய புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *