பிகினியில் இணையத்தை திக்கு முக்காட வைத்த மௌனி ராய்!

பிகினியில் இணையத்தை திக்கு முக்காட வைத்த மௌனி ராய்!
  • PublishedMarch 20, 2023

பாலிவுட் நடிகை மௌனி ராய் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட வைத்துள்ளார். ஒரு சில உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும் ஆனால், மௌனிக்கு எந்தவிதமான உடையும் கச்சிதமாக பொருந்தி விடும். பிகினி முதல் புடவை வரை அவருக்கு கச்சிதமாக பொருந்தும். உடை பொருந்துதோ இல்லையோ எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க இருப்பார்.

அந்த வகையில் பிகினி புகைப்படத்திற்கு ரசிகர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி நாயகி மௌனி ராயையே சேரும். அனகுண்டா பாம்பு இவ்வளவு அழகாக இருக்குமா என நாகினி சீரியலை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்தனர். வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற தொடராக இருந்தது நாகினி. இந்த சீரியல் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய், இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார். ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டதால், அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு வந்தது ஆனால், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை.

தற்போது பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள இவர் பிஸியாக வலம் வரும் அதவேளையில் பிஸி ஷெட்யூல்களுக்கு இடையில் கேளிக்கைகளிலும் நேரம் செலவிட்டு வருகின்றார். அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், RAW: Romeo Akbar Walter, London Confidential,Velle போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை மௌனி ராய் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற பிரம்மாஸ்திரம் முதல் பாகத்தில் மாயமந்திரம் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. தற்போது இவர் The Virgin Tree என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காததால் தொடர்ந்து இணையத்தில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். புளோரிடாவில் ஜாலியாக சுற்றுப்பயணம் செய்து வரும் மௌனி ராய்,கடற்கரையில் இருந்து பூப்போட்ட பிகினியில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *