லியோ விஜய் சொன்ன கவிதை… வெட்கத்தில் சிவந்த பிரபலம்
விஜய்யின் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.இந்நிலையில், லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கவிதை சொன்ன சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய்யின் லியோ திரைப்பட ஷூட்டிங் காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய், த்ரிஷா, சாண்டி மாஸ்டர், லோகேஷ் கனகராஜ் என பெரும் படையோடு தனி ஜெட் விமானத்தில் காஷ்மீர் பறந்தது லியோ படக்குழு. அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோரும் காஷ்மீர் போர்ஷனை முடித்துவிட்டு திரும்பினர். இதனையடுத்து இன்னும் சில தினங்களில் காஷ்மீர் ஷெட்யூல் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே கடந்த 14ம் திகதி தனது பிறந்தநாளை கொண்டாடினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், த்ரிஷா ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகின. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கேக் வெட்டி முடித்ததும் கவிதை பாடி வாழ்த்தியுள்ளார் விஜய். இதனை சுத்தமாக எதிர்பார்க்காத லியோ படக்குழுவினர் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து கவிதையை கேட்ட லோகேஷ், வெட்கத்தில் விழுந்து விழுந்து சிரித்துள்ளாராம். மேலும், அண்ணா உங்களுக்கு கவிதைலாம் எழுத தெரியுமா? என ஆச்சரியமாகவும் கேட்டுள்ளார். இதனை கேட்ட விஜய், “ஏன் நாங்களாம் கவிதை எழுதக்கூடாதா? எனக் சிரித்துக் கொண்டே கலாய்த்துள்ளாராம். இதனால் அங்கிருந்தவர்கள் சார் இன்னொரு கவிதை என கேட்க, ஆளவிடுங்கப்பா என எஸ்கேப் ஆகியுள்ளார் விஜய்.
விஜய் – லோகேஷ் கனகராஜ் இடையேயான நட்பை பார்த்த லியோ படக்குழுவினர் ரொம்பவே ஆச்சரியப்பட்டுள்ளனர். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து லியோவில் இணைந்துள்ள இக்கூட்டணி, இனிமேலும் அடுத்தடுத்த படங்களில் பணிபுரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீர் ஷெட்யூல் முடிந்ததும் விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே விஜய்யின் சால்ட் & பெப்பர் ஹேர்ஸ்டைல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விஜய் பெரும்பாலும் ஹேர்ஸ்டைல் உட்பட தோற்றங்களில் வித்தியாசம் காட்டமாட்டார். ஆனால், லோகேஷ் கேட்டுக்கொண்டதால் லியோ படத்தில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளாராம் விஜய். அதுவும் மொத்தம் 30 விதமான ஹேர்ஸ்டைல்கள் விஜய்க்கு செய்யப்பட்டு அதில் இறுதியாக ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.