பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
தமிழகத்தில் மட்டுமே 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. ஆனால், படத்தில் பல பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தாலும் கூட, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நல்ல வசூலை ஈட்ட முடியவில்லை. சில பகுதிகளில் முதல் பாகம் வெளியாகவும் இல்லை. இந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் 2 விநியோகஸ்தர்களைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஏனெனில் முதல் பக்கம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளதாம். எனவே, இரண்டாம் பாகம் தெலுங்கு விநியோகஸ்தர்களைப் பெற முடியாமல் திணறி வருகிறது. பொன்னியின் செல்வன் 2 படத்தின் உரிமையை வாங்க எந்த ஒரு தெலுங்கு விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருப்பதால் வரும் நாட்களில் புரொமோஷன் செய்வதன் மூலம் படம் நல்ல வியாபாரம் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் ,பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் அகநக என தொடங்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
Retweet this post and show how excited you are for the #AgaNaga lyric video dropping at 6 PM! #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @IMAX @primevideoIN @Karthi_Offl @trishtrashers pic.twitter.com/33vEndBxgb
— Lyca Productions (@LycaProductions) March 20, 2023