விஜய் டிவியின் ஹிட் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை

விஜய் தொலைக்காட்சியில் நிறைய புதிய கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் தொடர் நீ நான் காதல்.
கடந்த நவம்பர் 2023ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. Iss Pyaar Ko Kya Naam Doon? என்ற ஹிந்தி தொடரின் ரீமேக்காக நீ நான் காதல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கிய பாத்திரமாக உள்ளது. இதில் ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தொடரில் சொதப்பல்கள் ஏற்பட்டுவிடும்.
தற்போது இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது. இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவரின் மாற்றம் தான் நடந்துள்ளது.
புதிய அஞ்சலியாக இனி ஸ்வேதா என்ற நடிகை நடிக்க உள்ளாராம்.