விபரீத முடிவு எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

விபரீத முடிவு எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
  • PublishedApril 10, 2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வரும் நடிகை லாவண்யா தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அவர் தற்போது, லாவண்யா தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இத்தகைய நிலையில், தற்பொழுது அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக கூறி ஒரு பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலத்தில் லாவண்யாவின் குரலை பலரும் கேலி செய்து பேசுவார்களாம்.

மேலும், லாவண்யா நடிக்க வந்த புதிதில் குடும்பத்தினர் அவரை நடிக்க கூடாது என்று கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர். தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த அவர் குடும்பத்துடன் கடுமையாக போராடி இருக்கிறார். அந்த நேரத்தில் தற்கொலை செய்து கொள்ள அவர் முயற்சி செய்ததாக பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் லாவண்யாவின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அத்துடன் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் லாவண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 லட்சம் பாலோவர்களுக்கும் அதிகமாக வைத்துள்ளார்.

அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *