சல்மான்கானுடனான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பூஜா!

சல்மான்கானுடனான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பூஜா!
  • PublishedApril 16, 2023

நடிகை பூஜா ஹெக்டே,  சல்மான்கானுடன் ‘கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

படப்பிடிப்பின்போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த பூஜா நேற்று இது குறித்து பேசியிருக்கிறார்.

அவர் கூறியதாவது  நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.

சல்மான் கான் -பூஜா ஹெக்டே தற்போது சல்மான் கானுடன் நடித்த படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கூடவே எங்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது.

ஆனால் நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் என்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *