பிரியங்காவுக்கு ஏற்பட்ட பெரிய அடி… ஆனாலும் திருந்தாத பொண்ணு

பிரியங்காவுக்கு ஏற்பட்ட பெரிய அடி… ஆனாலும் திருந்தாத பொண்ணு
  • PublishedJune 13, 2025

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.

அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் வசீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவி வேறொரு நிறுவனத்துடன் இணைந்ததால் பிரியங்காவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்ற செய்திகள் பரவியது. ஆனால் பிரியங்கா திருமணத்திற்குப்பின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தார்.

தற்போது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 துவங்கவுள்ளது. அதன் பிரமோ வீடியோவை பிரியங்கா பகிர்ந்துள்ளார். இதனையடுத்து தனக்கு காலில் அடிப்பட்டதை புகைப்படத்துடன் பிரியங்கா வெளியிட்டார்.

காலில் ஏற்பட்ட பிரச்சனையுடன், Oo solriya oooohm solriya season 3 நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவை பாராட்டி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *