புஷ்பா பாகம் இரண்டின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

புஷ்பா பாகம் இரண்டின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!
  • PublishedMarch 3, 2023

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் புஷ்பா.
இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்தது.
சுமார் 350 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் ஈட்டியது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
புஷ்பா இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
இதையடுத்து இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய செய்தி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன்படி, ‘புஷ்பா-தி ரூல்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வருகிற ஏப்ரல் 8-ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *