தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் 100 கோடி ஓடிடி உரிமையை பெற்ற புஷ்பா

தெலுங்கு சினிமாவில் முதன் முதலில் 100 கோடி ஓடிடி உரிமையை பெற்ற புஷ்பா
  • PublishedApril 12, 2024

தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தை விறுவிறுவென தயாரித்து வந்தனர் பட குழுவினர்.

படத்தின் முடிவிலேயே அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த புஷ்பா, இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வருகிறது புஷ்பா 2.

சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் பரிசாக புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு.

தெலுங்கானாவின் திருவிழாவான ஜாதரா காட்சியை பெண் வேடமிட்டு அல்லு அர்ஜுன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

அதே வேடத்தில் அமைந்த அவரது நடிப்பு, ஆக்சன் என மொத்தமும் ரசிகர்களை கவர்ந்து பல பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்து வருகிறது.

ஆக்ரோஷமான ஆக்சன் உடன் குத்தாட்டம் போட்ட அல்லு அர்ஜுனின் வீடியோ ஏகபோகமாக வைரல் ஆனதால் இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் தளம் 100 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாம்.

தெலுங்கு சினிமாவில் 100 கோடி ஓடிடி உரிமையை பெற்று முதல் படம் என்ற பெருமையை அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 பெற்றுள்ளது.

ஓடிடி மட்டுமே 100 கோடிக்கு விலை போய் உள்ளதால் இன்னமும் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி எனபல மொழிகளிலும் ரிலீசாகும் பட்சத்தில்,

கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் பிசினஸ் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர் புஷ்பா 2 பட குழுவினர்.

புஷ்பா 2 படத்தின் மீதான ரசிகர்களின் வெறித்தனமான ஆர்வத்தால் மற்ற நடிகர்கள் தங்களது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *