22 வருடங்களுக்கு பின் விக்ரமின் படம் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

22 வருடங்களுக்கு பின் விக்ரமின் படம் இரண்டாம் பாகம் உருவாகிறதா?
  • PublishedApril 12, 2024

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியாகி விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமான ஜெமினி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் விக்ரமும் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

இயக்குனர் சரண் இயக்கி இருந்த இந்த படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக கிரண் ரத்தோர் நடித்திருந்தார். மேலும் கலாபவன் மணி, மனோரமா, வினு சக்கரவர்த்தி, முரளி, சார்லி, ரமேஷ் கண்ணா, தாமு, வையாபுரி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

கேங்ஸ்டர் கதையம்சத்துடன் ஆக்சன், காதல், காமெடி, என பக்கா கமர்சியல் திரைப்படமாக வெளியான இப்படத்தில் ஓ போடு என்கிற வசனமும், விக்ரமின் ஸ்டைலும் மிகவும் பிரபலமானது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதை உறுதி செய்வது போல், நடிகர் விக்ரம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சிக்னேச்சர் ஸ்டைலுடன் கூறிய புகைப்படத்தை வெளியிட்டு, போட்டுள்ள பதிவில், “மிக்க நன்றி, என் மேல் உங்கள் அன்பை பொழிவதற்கு. இன்னும் சில தினங்களில், நீங்களே கெஸ் பண்ணுங்க என்னவென்று?? ‘ஓ போட மறக்காதீங்க’ என தெரிவித்துள்ளார்” இதன் மூலம் கிட்ட தட்ட ஜெமினி பார்ட் 2 உருவாவது உறுதி என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *