குவியும் பாலியல் புகார்…, கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராதிகா ஆப்தே

குவியும் பாலியல் புகார்…, கசப்பான அனுபவங்களை பகிர்ந்த ராதிகா ஆப்தே
  • PublishedNovember 23, 2023

தெலுங்கு திரையுலகில் தனக்கும் பாலியல் சீண்டல் நடந்துள்ளதாக நடிகை ராதிகா ஆப்தே கூறி இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ரா, தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்று பகிர்ந்து கொண்டார். அப்போது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஒரு படத்தில் நடித்தபோது டாப் ஹீரோ ஒருவர் தன்னை ரூமுக்கு அழைத்ததாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்றும் மனவேதனையுடன் கூறி கண்ணீர் சிந்தினார். அந்த சம்பவத்துக்கு பின் தான் சினிமாவை விட்டே விலகியதாக விசித்ரா கூறி இருந்தார்.

விசித்ரா சொன்ன அந்த சம்பவத்தை பற்றி ஆராயத் தொடங்கிய நெட்டிசன்கள் அந்த டாப் ஹீரோ யார் என்பதையும் தேடி கண்டுபிடித்தனர். அவர் வேறு யாருமில்லை, தெலுங்கு திரையுலகில் தற்போது மாஸ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் பாலகிருஷ்ணா தான்.

அவர் படத்தில் நடித்தபோது தான் விசித்ராவுக்கு இப்படி நடந்தது என ஆதாரத்தோடு நெட்டிசன்கள் வெளியிட்டதால், பாலகிருஷ்ணா பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விசித்ராவுக்கு முன்னதாக நடிகை ராதிகா ஆப்தேவும் பாலகிருஷ்ணா உடன் நடித்தபோது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் பற்றி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் பேசியதாவது :

“நான் ஷூட்டிங் சென்ற முதல் நாளே என்னை பார்த்ததும் என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டு சென்றார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே எழுந்து அந்த இடத்திலேயே அவரை திட்டினேன். இனி ஒருபோதும் இப்படி செய்யக்கூடாது என அத்தனை ஜூனியர் ஆர்டிஸ்ட் முன்பும் வார்னிங் கொடுத்தேன்.

அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. ஒருமுறை ஹீரோ ஒருவர் என்னை அழைத்து, முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் எப்போது ரூமுக்கு கூப்பிடு வருகிறேன் என்று சொன்னார். ஆனால் தமிழ் சினிமாவில் நான் ரஜினிகாந்துடன் நடித்தபோது அப்படி நடந்ததில்லை. அவரைப்போன்ற சிறந்த மனிதர் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அன்பானவராக இருந்தார் என ராதிகா ஆப்தே கூறி இருக்கிறார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *