சீனு ராமசாமியின் டார்ச்சரை தாங்க முடியாமல் திரையுலகை விட்டே ஓடி போன இளம் நடிகை… ஷாக்கிங் நியூஸ்

சீனு ராமசாமியின் டார்ச்சரை தாங்க முடியாமல் திரையுலகை விட்டே ஓடி போன இளம் நடிகை… ஷாக்கிங் நியூஸ்
  • PublishedNovember 23, 2023

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி, இளம் நடிகை ஒருவருக்கு கொடுத்த டார்ச்சரால் தான் அவர் திரையுலகை விட்டு சில காலம் ஒதுக்கி இருந்தார் என, பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ள தகவல் திரையுலகத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி.

தற்போது இயக்குனர் சீனு ராமசாமி குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். இவர் திரை உலகில் இருந்து, சில காலம் ஒதுங்கி இருந்ததன் காரணம், சீனு ராமசாமி செய்த டார்ச்சர் தான் என பத்திரியாகையாளர் பிஸ்மி அதிரடியாக கூறியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி பல வருடங்களாக வெளியாகாமல் உள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’ இந்த படத்தில் மனிஷா யாதவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது மனுஷா யாதவுக்கு, சீனு ராமசாமி தொடர்ந்து கொடுத்த டார்ச்சர் சொல்லி மாளாது என்று பிஸ்மி கூறியுள்ளார்.

மேலும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது மற்றொரு ஷாக்கிங் தகவல் என கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *