தனக்கு நடந்த பாலியல் சீண்டலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

தனக்கு நடந்த பாலியல் சீண்டலை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
  • PublishedNovember 23, 2023

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய கல்லூரி காலத்தில் நடந்த பாலியல் சீண்டல் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் வாரிசு நடிகர் – நடிகைகளாக அறிமுகமாகும் அனைவருமே, முன்னணி இடத்திற்கு வந்து விடுவதில்லை. குறிப்பாக தமிழில் அறிமுகமான பல வாரிசு பிரபலங்கள், வந்த வேகத்தில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். ஒரு சில பிரபலங்கள் மட்டுமே, தொடர்ந்து முன்னணி இடத்திற்காக போராடி வருகிறார்கள்.

ஆனால் கீர்த்தி சுரேஷ் மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் 2000 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ‘கீதாஞ்சலி ‘என்கிற மலையாள படத்தில் அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர்.

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை விட, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவே கீர்த்தி சுரேஷ் விரும்பினார். அந்த வகையில் தனுஷ், விஜய், சூர்யா, போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு மொழிகளை தாண்டி, ஹிந்திலும் பிஸியாகி உள்ள கீர்த்தி சுரேஷ்… தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பாலியல் சீண்டல் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இவர் கல்லூரில் படிக்கும் போது, தன்னுடைய தோழியுடன் நடு ரோட்டில் நடந்து சென்றபோது இவர் மீது குடிகாரன் ஒருவர் சாய்ந்து, கை வைத்ததாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்று விட்டதாகவும், பின்னர் அவரை அடித்ததாகவும் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *