“ரன்பீர் கன்னத்தில் அறைந்தேன், பின் அழுதேன்” – ராஷ்மிகா மந்தனா கூறுவது என்ன?

“ரன்பீர் கன்னத்தில் அறைந்தேன், பின் அழுதேன்” – ராஷ்மிகா மந்தனா கூறுவது என்ன?
  • PublishedJanuary 20, 2024

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாபிதியோல், டிருப்தி டிம்ரி, அனில்கபூர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

தந்தை, மகன் பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்தது.

அனிமல் படம் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது,

‘அனிமல்’ படத்தின் காட்சியில் கணவராக நடிக்கும் ரன்பீர்- டிருப்தி டிம்ரியுடன் ஒன்றாக இருந்ததால் ரன்பீர் கன்னத்தில் உண்மையாக அறைந்தேன். நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ‘ஆக்ஷனும்’, ‘கட்டுக்கும்’ இடையில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை.

காட்சி முடிந்ததும் நான் உண்மையாக அழுதேன். ரன்பீரிடம் சென்று அது சரியா? நலமாக இருக்கிறீர்களா? என்றேன். காட்சியில் நான் நடிகையாக இருப்பதன் உச்சத்தை உணர்ந்தேன். ‘அனிமல்’ படத்திலும் காட்சியிலும் நான் நடித்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *