ஸ்ட்ராப்லெஸ் உடையில் இளசுகளின் மனதை சுண்டி இழுத்த ராஷ்மிகா..

ஸ்ட்ராப்லெஸ் உடையில் இளசுகளின் மனதை சுண்டி இழுத்த ராஷ்மிகா..
  • PublishedMarch 28, 2023

விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ராஷ்மிகா மந்தனா, நீளமான கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். கன்னடத் திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

பார்த்தவுடன் கவர்ந்து இழுக்கும் அழகும், கலகலப்பான பேச்சு, துறுதுறுப்பான பார்வை என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்கு வந்து சில ஆண்டுகளே ஆனாலும், இவர் நேஷ்னல் க்ரஷ் நடிகை என பெயர் எடுத்துள்ளார். இவரின் க்யூட்டான சிறு சிறு அசைவுகளுக்கு அடிமையான ரசிகர்கள் ராஷ்மிகாவை விடாது பின் தொடர்ந்து வருகின்றனர்.

அடுத்தடுத்த படங்களில்

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி வா சாமி வாயா சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டடார். அந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம்,இந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வசூலை அள்ளியது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா2 படத்திலும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2023 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக புஷ்பா 2 திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா, தமிழில் வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது நீண்டநாள் ஆசை நிறைவேற்றிக்கொண்டார். பாலிவுட்டில் அபிதாப் பச்சனுடன் குட்பை படத்தில் நடித்து பெயர் எடுத்த ராஷ்மிகா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரன்பிர் கபூருடன் அனிமல் படத்திலும் நடித்து வருகிறார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஹங்காமா விருது வழங்கும் விழாவிற்கு அமி படேல் வடிவமைத்த நீளமான கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து வந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். மேலும், அந்த உடைக்கு ஏற்றபடி வெள்ளி மோதிரம் மற்றும் வளையத்தை அணிந்திருந்தார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், அவரை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *