தலைமறைவான பிக் பாஸ் பிரபலம் அபிநய் மனைவி – வலைவீசி தேடும் பொலிஸார்

தலைமறைவான பிக் பாஸ் பிரபலம் அபிநய் மனைவி – வலைவீசி தேடும் பொலிஸார்
  • PublishedMarch 28, 2023

பிக் பாஸ் அபிநய்யின் மனைவி அபர்ணாவை ர்பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் வட்டி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், முதல் வாரத்திலிருந்தே எலிமினேஷனில் சிக்கினார். ஆனால், மக்களின் ஆதரவு இருந்ததால் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் 77 நாட்கள் தாக்குபிடித்து இருந்தார்.

பிக் பாஸ் வீட்டில் அபிநய் இருந்த போது, பாவனியின் பின்னால் சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும், இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து விட்டதாகவும், இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், இருவரும் தற்போது வரை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

தலைமறைவான அபர்ணா

இந்நிலையில், அபிநய்யின் மனைவி அபர்ணா மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக மஞ்சு என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாம்பலம் பொலிஸார் அபர்ணா மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அபர்ணாவை தேடி வருகின்றனர்.

ஆடை வடிவமைப்பாளரான மஞ்சு, அபர்ணாவின் துணிகடைக்கும் ஆடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார். இதன் மூலம் மஞ்சுவும், அபர்ணாவும் நண்பர்களாகி உள்ளனர். இதையடுத்து, மஞ்சுவின் மகள் 12வது வகுப்பில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அவரை டாக்டருக்கு படிக்கவைக்க ஆசைப்பட்டுள்ளார். இதற்காக நீட் தேர்வு எழுதி இருந்தார் மஞ்சுவின் மகள் ஆனால், நீட் தேர்வில் தோல்வி அடைந்தார்.

இதை தெரிந்து கொண்ட அபர்ணா,மஞ்சுவிடம் தனக்கு மருத்துவக்கல்லூரியில் அஜய் என்ற நண்பரை இருக்கிறார் என்றும், அவரிடம் 20 லட்சம் கொடுத்தால் மருத்துவ சீட் கிடைத்துவிடும், இதற்கு முன் பணமாக 5 லட்சத்தை இப்போதே கொடுத்து சீட்டை புக் செய்துவிட்டால், மீதி தொகையை கல்லூரியில் சேர்ந்ததும் கொடுத்துவிடலாம் என கூறியுள்ளார்.

மருத்துவ சீட்டுக்கு 20 லட்சம்

அபர்ணாவின் பேச்சை நம்பி மஞ்சு 5 லட்சத்தை அஜய்யின் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதன்பின் மருத்துவ சீட்டு கிடைத்து விட்டதாக கூறி சான்றிதழ் ஒன்றை அபர்ணா அனுப்பி உள்ளார். அதை எடுத்துக்கொண்டு தன்னுடைய மகளை அந்த மருத்துவ கல்லூரியில் சேர்க்க சென்ற போதுதான் அந்த சான்றிதழ் போலி என தெரியவந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த மஞ்சு, அபர்ணாவின் ஜவுளிக் கடைக்குச் சென்று பணத்தை கேட்டுள்ளார். ஆனால், அபர்ணா இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், யாருடைய கணக்கில் பணத்தை போட்டீர்களோ அவரிடமே சென்று கேளுங்கள் என்று மஞ்சுவிடம் காரசாரமாக பேசியுள்ளார். தொடர்ந்து மஞ்சு துணிக்கடைக்கு வந்து பணத்தை கேட்டதால், அபர்ணா கடையை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மஞ்சு, மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் மீது ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள அபர்ணா மற்றும் அஜய்யை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *