லியோ திரைப்படமும் LCU தான்? வெளியான முக்கிய அறிவிப்பு

லியோ திரைப்படமும் LCU தான்? வெளியான முக்கிய அறிவிப்பு
  • PublishedMarch 28, 2023

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக பான் இந்தியா சினிமாவாக உருவாகி வரும் திரைப்படம் லியோவும் LCUவில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் விஜயுடன், திரிஷா, சஞ்சய் தத், இயக்குனர் மிஸ்கின், கௌதம் மேனன், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தனை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் வைத்து படமாக்கப்பட்டது.

படக்குழுவினரும் அவ்வப்போது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படக்குழுவினர் வெளியிடும் அப்டேட்டுகளையும் டீ கோட் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

கைதி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்த மரியம் ஜார்ஜ் லியோ படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் மேலும் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி காஷ்மீருக்கு படக்குழுவினருடன் சென்றபோது இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சல் தான் என ரசிகர்கள் டி கோட் செய்தனர்.

தற்போது திரைப்படத்தினைப் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த அப்டேடின்படி விக்ரம் திரைப்படத்தில் ஏஜெண்டாக நடித்த ஃபகத் பாசில் லியோ திரைப்படத்திலும் அதே அமர் கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார் என்பதுதான். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கும் முன்னர் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *