மீண்டும் வைரலாகும் வருண் – சக்தி ஜோடி.. வருணை “குரங்கா” என திட்டிய சக்தி

மீண்டும் வைரலாகும் வருண் – சக்தி  ஜோடி.. வருணை “குரங்கா” என திட்டிய சக்தி
  • PublishedJuly 1, 2023

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மக்கள் லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது

மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது.

மேலும், இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரை, வெள்ளி துறையிலும் கலக்கிக் கொண்டு வருகிறார்.

பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும், புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல் ரவீனா youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் குறித்த தொடர் முடிவடைந்திருந்தாலும், வருன் – சக்தி காதல் கதை இன்னும் மக்கள் மனதிலும், இளசுகளின் மனதிலும் உள்ளன.

ஆரம்பமாகி சற்று சீக்கிரமாகவே முடிவடைந்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் சக்தியாக நடித்த ரவீனா மீண்டும் வருனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.

வருனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஹெப்பி பேத்டே டா கொரங்கா என பதிவிட்டு பட்டையை கிளப்பியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *