விஜய்க்கு 200 கோடி சம்பளம்?? கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு… வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி

விஜய்க்கு 200 கோடி சம்பளம்?? கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு… வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி
  • PublishedMay 19, 2023

தளபதி 68ல் நடிப்பதற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என செய்திகள் வெளியாகின. இதன் பின்னணி பற்றியும் விஜய்யின் உண்மையான சம்பளம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் விஜய். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தளபதி 68 படத்தை அட்லீ இயக்கவுள்ளதாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், தற்போது வெங்கட் பிரபு தான் இயக்குவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் ஆகியோரும் தளபதி 68 படத்தின் இயக்குநர் லிஸ்ட்டில் இருந்தனர்.

இந்நிலையில் இந்தப் படத்திற்காக விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

லியோ படத்திற்காக விஜய் 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், தளபதி 68 படத்திற்கு கூடுதலாக 75 கோடி ரூபாய் என மொத்தமாக 200 கோடி வழங்கப்படுவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது..

அதுமட்டும் இல்லாம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் தான் என அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனால், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இதனையடுத்து சினிமா செய்தியாளர்கள் பலரும் விஜய்யின் சம்பளம் குறித்த செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். அதில், தளபதி 68 படத்திற்கு விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்பது முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளனர்.

தற்போது 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வரும் விஜய்க்கு கூடுதலாக 75 கோடி ரூபாய் கொடுக்க ஏஜிஎஸ் என்ன முட்டாள் நிறுவனமா என வலைப்பேச்சு பிஸ்மி டிவிட் செய்துள்ளார்.

அதிகபட்சமாக விஜய்க்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி 130 முதல் 150 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

ஆனால், கண்டிப்பாக விஜய்க்கு 200 கோடி சம்பளம் கிடையாது என சினிமா செய்தியாளர்கள் அடித்துக் கூறி வருகின்றனர். இதனால் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் என்ற உருட்டு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *