ஜெய்லர் ரிலீஸுக்கு முன்னரே டாப் ஹீரோக்களுக்கு வலை வீசிய நெல்சன்!

ஜெய்லர் ரிலீஸுக்கு முன்னரே டாப் ஹீரோக்களுக்கு வலை வீசிய நெல்சன்!
  • PublishedMay 19, 2023

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ஜெய்லர் படத்தை இயக்கி வருகிறார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் இந்த படம்  ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே நெல்சனின் மார்க்கெட் டாப் கீரில் எகிறி விட்டது. டாப் ஹீரோக்கள் படங்களில் அடுத்தடுத்து புக் ஆகி கொண்டு இருக்கிறார்.

அதாவது  சமீபத்தில் தனுஷை நேரில் சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதை பிடித்ததும் அவரும் அதில் நடிக்க உடனே ஒத்துக் கொண்டுள்ளார்.

இது மட்டுமல்ல கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கும் திட்டத்திலும் நெல்சன் திலிப் குமார் இருக்கிறார். முதலில் தனுஷை வைத்து இயக்கும் படத்தை கமலஹாசனை வைத்து தயாரித்துவிட்டு அதன் பிறகு உலக நாயகனின் படத்தை இயக்கும் எண்ணத்தில் நெல்சன் இருக்கிறார்.

இந்த முறை மிஸ் ஆக கூடாது,  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்று ஒரு முடிவுடன் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *