பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் “சைத்தான்”.. 10 நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் “சைத்தான்”.. 10 நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
  • PublishedMarch 18, 2024

மகளிர் தினத்தை ஒட்டி வெளியான அஜய்தேவ்கனின் சைத்தான் நேர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலில் சாதனை படைத்து வருகிறது.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவகன் உடன் மாதவன், ஜோதிகா, ஜான்வி மற்றும் குழந்தை நட்சத்திரம் அன்கட்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ளார் ஜோதிகா.

சைத்தானாக மிரட்டிய மாதவன், அவனிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றும் அஜய் தேவகன் இவர்களை சுற்றி பின்னப்பட்ட இக்கதையில் சுவாரசியங்களுக்கு குறைவில்லாமல் அதகளப்படுத்தி இருந்தார் இயக்குனர் விகாஸ்.

“ஒரு லட்டு கொடுத்து, உன் மகளே எனக்கு கொடு” என்று கூறுவது கொடூரத்தின் உச்சம். முன்பின் அறியாதவர் போடும் கட்டளைக்கு குடும்பமே ஆட வேண்டும் என்று நினைக்கும் மாதவனின் குரூரம் நாடி நரம்புகளை நடுங்க வைத்தது.

ஜியோ ஸ்டூடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ், பனாராமா ஸ்டூடியோஸ் இவர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுள்ளது சைத்தான்

குஜராத்தி மொழியில் 2023இல் வெளிவந்த வாஷ் திரைப்படத்தின் ரீமேக்கே சைத்தான். கடந்த ஞாயிறு அன்று மட்டுமே ஒரே நாளில் 10 கோடியை வசூலித்துள்ளது. வெளியான பத்து நாட்களில், இந்திய அளவில் 106 கோடியை கிராஸ் செய்த இத்திரைப்படம், உலக அளவில் 150 கோடியை தாண்டி விறுவிறுவென முன்னேறி வருகிறது.

2024 வெளிவந்த திரைப்படங்களிலேயே 100 கோடியை தாண்டிய மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது சைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *