மயிரிழையில் உயிர் தப்பிய ‘பேமிலி ஸ்டார்’ பாடகி மங்லி

மயிரிழையில் உயிர் தப்பிய ‘பேமிலி ஸ்டார்’ பாடகி மங்லி
  • PublishedMarch 18, 2024

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியாக நடித்து வரும் படம் ‘தி பேமிலி ஸ்டார்’.

கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் தேவரகொண்டாவின் இந்த படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பரசுராம்.

இந்த படத்தில் இருந்து ‘கல்யாணி வச்சா வச்சா’ என்கிற சிங்கிள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த பாடலை மங்லி என்கிற பெயரில் அழைக்கப்படும் சத்தியவதி ரத்தோட் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானதில் இருந்து இவரும் தற்போது லைம் லைட்டில் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று தனது நெருங்கிய நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது இவர்கள் வந்த கார் விபத்தில் சிக்கியது.

எதிரே வந்த வாகனம் இவர்கள் கார் மீது கிட்டத்தட்ட உரசிய நிலையில் மங்லி மற்றும் அவருடன் பயணித்தவர்கள் அனைவருமே அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மங்லி இதுவரை எந்த தகவலையும் வெளியிடாத நிலையில், விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இந்த செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *