எழுதி வாங்கிய கமல்… ஆண்டவர் கிட்ட ஆட்டம் போட முடியுமா? சிக்கிக்கொண்ட சிம்பு

எழுதி வாங்கிய கமல்… ஆண்டவர் கிட்ட ஆட்டம் போட முடியுமா? சிக்கிக்கொண்ட சிம்பு
  • PublishedMarch 18, 2024

வழக்கமாக சிம்புவிடம்தான் தயாரிப்பாளர்கள், நடிகைகள் என அனைவரும் மாட்டுவார்கள். ஆனால் இந்த முறை சிம்பு நடிகர் கமலஹாசனிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.

நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு எஸ் டி ஆர் 48 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக தலை முடியை நீளமாக வளர்த்து புது புது கெட்டப்புகளில் போஸ் கொடுத்துக் கொண்டு வெளியில் சுற்றி வந்தார்.

ஆனால் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இழுத்துக் கொண்டே செல்கிறார். விக்ரம் படத்தில் சம்பாதித்த பணத்தை வைத்து படத்தை எடுப்பதால் பட்ஜெட் பெரிதாவதில் கமல் ஒன்றும் பெரிதாக கவலை கொள்ளவில்லையாம்.

ஒரு கட்டத்தில் சிம்பு தன் பொறுமையை இழந்து வேறொரு படத்தில் நடிப்பதாக முடிவு எடுத்தார். இந்த பிரச்சனையெல்லாம் கமலுக்கு கைவந்த கலை.

ஏற்கனவே இந்த படத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் எஸ் டி ஆர் 48 படத்தை முடித்துக் விட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் எனவும், அதுவரையும் இந்த படத்தின் கெட்டப்பை மாற்றக் கூடாது எனவும் ஆணித்தனமாக எழுதி கையெழுத்து வாங்கி விட்டார்.

இது தெரியாம சுதா கொங்கரா படத்தில் வேற நடிக்கிறேன்னு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் சிம்பு. அந்த படத்திற்கு சுத்தமா வேற ஒரு கெட்டப்பில் வர வேண்டுமாம். கால்ஷீட் தேதி முடிந்தால் இந்த படமும் அவ்வளவுதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *