கமலுக்காக ரூட்டை மாற்றும் சிவகார்த்திகேயன் : கைகொடுக்குமா புதிய படம்!

கமலுக்காக ரூட்டை மாற்றும் சிவகார்த்திகேயன் : கைகொடுக்குமா புதிய படம்!
  • PublishedApril 4, 2023

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம் மூலமாக பல நடிகர்களை வைத்து படம் செய்து வருகிறார். அந்தவகையில் லோஜேஷ் கனகராஜை வைத்து இவர் எடுத்திருந்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படம் கொடுத்த ஊக்கத்தில் தற்போது சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்துதல திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது சிவகாரத்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனை புதுவிதமாக காட்ட முயற்சி செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.  நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் காமெடி மற்றும் கமர்சியல் என கலக்கிக் கொண்டிருப்பவர்.

ஆனால் கமலஹாசன் தயாரிப்பில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் சிவா. இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். சிவாவுக்கு ஆக்சன் ஹீரோ படம் செட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *