அரசியல் வாரிசு நடிகருக்காக ரஜினி மற்றும் கமல் செய்யப்போகும் காரியம்….

அரசியல் வாரிசு நடிகருக்காக ரஜினி மற்றும் கமல் செய்யப்போகும் காரியம்….
  • PublishedMay 16, 2023

‘மாமன்னன்’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ‘மாமன்னன்’ படத்தை ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவை வரும் ஜூன்-1ம் தேதியன்று சென்னையில் நடத்த படத்தின் தயாரிப்பு குழு திட்டமிட்டு இருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கிறது.

‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் படம் தான் உதயநிதி நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த படத்துடன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யவிருக்கிறார்.

இதனால் உதயநிதி ஸ்டாலினுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *