இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் மழை

இதுவரை தமிழ் சினிமா பார்க்காத வசூல் மழை
  • PublishedOctober 9, 2023

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்  ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவந்த படம் ஜெய்லர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் என மாபெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம் முதல் நாளில் இருந்து உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத வசூலை ஜெயிலர் படம் செய்தது.

அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபத்தையும் ஜெயிலர் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்-க்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், படத்தில் பணிபுரிந்த நபர்களுக்கு தங்க நாணயம் பரிசாக கலாநிதி மாறன் வழங்கினார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக இருக்கும் ஜெயிலர் இறுதியாக ரூ. 635 கோடி வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *