டொப் 5 நடிகர்களுக்கு RED CARD வழங்க அதிரடி நடவடிக்கை

டொப் 5 நடிகர்களுக்கு RED CARD வழங்க அதிரடி நடவடிக்கை
  • PublishedJune 19, 2023

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு தேதி கொடுக்கலாம் இருப்பது உள்ளிட்ட பல புகார்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

நோட்டீஸுக்கு பிறகும் இதை தொடர்ந்தால் அவர்கள் உடன் இனி எந்த தயாரிப்பாளரும் பணியாற்ற கூடாது என முடிவெடுத்து இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்காத முன்னணி நடிகர்களாக இருக்கும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்து இருக்கின்றனர்.

இதில் சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்திருக்கின்றனர்.

நடிகர் சங்கம் கொடுக்கும் பதிலை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

  1. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் சிம்பு முன் பணம் பெற்று கால்ஷீட் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக அவருக்கு ரெட் கார்ட் வழங்கவும்,
  2. மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலுவிடம் முன் தொகை பெற்று அவரின் படத்தில் நடிக்காத காரணத்திற்காக விஷால்,
  3. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்காததற்காக எஸ்.ஜே.சூர்யா,
  4. தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் அடிப்படையில் அதர்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
  5. அதைப்போல் யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து முறையான பதில் கொடுத்தால் அவர்களுடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தருவது என்றும் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெட் கார்ட் விதிப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *