வெள்ளித்திரையிலிருந்து சினிமாவில் நாயகியாக கால் பதித்தார் நம்ம “வெண்ணிலா”(பிரியங்கா குமார்)

வெள்ளித்திரையிலிருந்து சினிமாவில் நாயகியாக கால் பதித்தார் நம்ம “வெண்ணிலா”(பிரியங்கா குமார்)
  • PublishedNovember 27, 2023

காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவந்த நடிகை பிரியங்கா குமார், கன்னட மொழி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

பிரபல கன்னட இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் பிரியங்கா நடித்துள்ள திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. அதில், பிரியங்காவின் நடிப்பு குறித்து பலர் பாராட்டி வருகின்றனர்.

காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் பிரியங்கா நடித்து வந்தார். வெண்ணிலாவை நாங்கள் அதிகம் விரும்புவதாகவும், ஆனால், வெள்ளித்திரையில் தங்களின் நடிப்புக்கு நீங்கள் மேலும் பல உயரங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் 2021 ஜனவரி முதல் 2023 செப்டம்பர் வரை காற்றுக்கென்ன வேலி தொடர் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் அனந்தராமனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா குமார் நடித்து வந்தார்.

காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்தார். இத்தொடரின் மூலம் பிரியங்காவுக்கு சமூக வலைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

சமூக வலைதளத்தில் அவ்வபோது அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களையும் அவரின் ரசிகர்கள் பகிர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், கன்னட திரையுலகில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. கன்னட இயக்குநர் துனியா சூரி இயக்கத்தில் உருவான பேட் மேனர்ஸ் (Bad Manners) திரைப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடித்துள்ளார். கன்னட நடிகர் அபிஷேக் அம்பரீஷுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்துள்ளார்.

இத்திரைப்படம் நவ. 24ஆம் தேதி வெளியான நிலையில், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா, வாய்ப்பு கிடைத்தால் தற்போது வெளியாகியுள்ள பேட் மேனர்ஸ் திரைப்படத்தை தியேட்டரில் காணுங்கள் எனப் பதிவிட்டுள்ளார். அவருக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *