காயத்துடன் மும்பை புறப்பட்டு சென்ற சூர்யா.. கூடவே வந்த ஜோ… எங்க போறாங்க?

காயத்துடன் மும்பை புறப்பட்டு சென்ற சூர்யா.. கூடவே வந்த ஜோ… எங்க போறாங்க?
  • PublishedNovember 27, 2023

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் அவரது போர்ஷன்கள் நிறைவடையவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து அடுத்த மாதத்தில் அவர் சுதா கொங்கராவுடன் தனது சூர்யா43 படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கங்குவா பட சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற விபத்து காரணமாக தற்போது சூர்யா ஓய்வில் உள்ளார்.

கடந்த 23ம் தேதி ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டைக்காட்சி தொடர்பான சூட்டிங் நடத்தப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. சண்டைக் காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததையடுத்து காயமடைந்த சூர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதனால் கங்குவா படத்தின் சூட்டிங் சில தினங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் நலமாக இருப்பதாகவும் சூர்யா சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் ஓய்வு பெறும்வகையில் மும்பை புறப்பட்டு சென்றுள்ளார். உடன் அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவும் சென்றுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அவர் விரைவில் மும்பையிலிருந்து சென்னை திரும்புவார் என்றும் கங்குவா படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கராவின் படத்தில் இணையவுள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங் தாமதமாவதால் அந்தப் படத்தின் சூட்டிங்கும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *