பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ படத்திற்கான பிரமோஷனை தொடங்கிய படக் குழு
ByMithu
PublishedMarch 31, 2023
தயாரிப்பாளர் பூஷன் குமார்- இயக்குநர் ஓம் ராவத் ஆகியோர் கூட்டணியில் தயாராகியிருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படத்தின் பிரச்சாரத்தை, மங்களகரமான மாதா வைஷ்ணவி தேவியை தரிசித்த பிறகு படக்குழுவினர் தொடங்கி இருக்கின்றனர்.
பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’.இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், ஸன்னி சிங், சயீஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றின் பண்பாட்டுக் காவியமான இராமாயணத்தை புதிய கோணத்தில் புதுப்பித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை டி சீரிஸ், ரெட்ரோபைல்ஸ் ஆகிய நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர் பூஷன்குமார், கிரிசன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
மார்ச் 30ம் திகதியிலிருந்து ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரச்சார பாணியிலான விளம்பர நிகழ்வு தொடங்குகிறது. இதற்காக படக்குழுவினர் மாதா வைஷ்ணவி தேவியிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக அந்த ஆலயத்திற்கு சென்றனர்.
இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட படைப்புகளில் ‘ஆதி புருஷ்’ திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 16ம் திகதி அன்று வெளியாகிறது. நன்மை – தீமை இவற்றுக்கு இடையேயான போராட்டத்தில் நன்மை வெற்றி பெறும். இதனை முன்னெடுத்து தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்திற்கு மாதா வைஷ்ணவியின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.