ஷாருக்கானால் தென்னிந்திய இயக்குனருக்கு வலை வீசிய சல்மான்கான்!

ஷாருக்கானால் தென்னிந்திய இயக்குனருக்கு வலை வீசிய சல்மான்கான்!
  • PublishedApril 1, 2023

பாலிவுட் சினிமா உலகிற்கு கடந்த சில வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி என்பது கிடைக்கவே இல்லை.

ஒவ்வொரு படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்து தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கடந்த வருடம் என்பது அவர்களுக்கு சோதனை காலம் தான் என்று சொல்ல வேண்டும்.

தென்னிந்திய சினிமாக்கள் கோலோச்சி கொண்டிருக்க பாலிவுட் சினிமா அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் கௌரவத்தை காப்பாற்றுவது போல் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

முந்தைய இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறது. இது கொஞ்சம் நடிகர் சல்மான் கானுக்கு பயத்தை தான் காட்டி இருக்கிறது. எப்படியாவது அதேபோன்று ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நான்கு தென்னிந்திய இயக்குனர்களுக்கு வலை வீசி இருக்கிறார்.

அந்தவகையில்சல்மான்கானின் முதல் தேர்வாக இருப்பது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். இவர் தற்போது தளபதியின் லியோ திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனரான இவருடன் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார் சல்மான் கான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *