இந்து கடவுளை அவமதித்துவிட்டார்; டாப்ஸியை விளாசும் நெட்டிசன்ஸ்!

இந்து கடவுளை அவமதித்துவிட்டார்; டாப்ஸியை விளாசும் நெட்டிசன்ஸ்!
  • PublishedMarch 24, 2023

நடிகை டாப்ஸி பன்னு இந்து கடவுளை அவமதித்து விட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் பஸியாக நடித்து வருகிறார் டாப்ஸி, நயன்தாராவைப் போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கு படங்களை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

டாப்ஸி Blurr என்ற படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. க்ரைம் ,த்ரில்லர் பாணியில் வெளியாக இத்திரைப்படத்தில் டாப்ஸி பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி, தெலுங்கு மொழியில் 2010ஆம் ஆண்டு வெளியான ஜுமாண்டி நாடம் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, மற்ற மொழிகளை காட்டிலும் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகையாக இருந்த டாப்ஸி கடந்த ஆண்டு, Outsider FIlms என்ற பெயரில், தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக மாறினார்.

டாப்ஸி நடித்த மிஷன் மங்கள்,சாந்த் கி ஆன்க், தப்பத், ஹசீன் தில்ருபா, போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றன. டாப்ஸி இந்தியில் சபாஷ் மித்து என்ற படத்தில் நடித்திருந்தார். கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘சபாஷ் மிது’ திரைப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.

சர்ச்சையில் சிக்கிய டாப்ஸி

நடிகை டாப்ஸி பன்னு, மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய, Lakme Fashion Week கலந்து கொண்டார். இந்த பேஷன் ஷோவில் நடிகை டாப்ஸி, டிசைனர் மோனிஷா ஜெய்சிங்கின் வடிவமைத்த சிவப்பு நிற உடை அணிந்து கொண்டு, உள்ளாடை எதுவும் அணியாமல் மிகவும் கவர்ச்சியாக முன்னழகு தெரியும்படி கேட்வாக் நடந்து வந்திருந்தார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நெக்லஸில் மகாலட்சுமி அம்மன் உருவம் பொறித்திருந்த நிலையில், கவர்ச்சி ஆடை அணிந்து கொண்டு அம்மன் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்றும், விளம்பரத்திற்காக இப்படி செய்யலாமா? டாப்ஸி இந்து மதத்தை இழிவுப்படுத்திவிட்டார் என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்.

நடிகை டாப்ஸி தற்போது தமிழில் ஜன கண மன படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். Woh Ladki Hai Kahaan, Dunki, Phir Aayi Haseen Dillruba போன்ற இந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அறிமுகமான டாப்ஸி, பாலிவுட், கோலிவுட் என அனைத்திலும் மிரட்டி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *