அஜித் அப்பா காலமான செய்தி கேட்டு உடனடியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!

அஜித் அப்பா காலமான செய்தி கேட்டு உடனடியாக நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்!
  • PublishedMarch 24, 2023

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில், நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் காலமான செய்தி கேட்டு ரொம்பவே மனவேதனை அடைந்துள்ள விஜய் நடிகர் அஜித்தை நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் பல ஆண்டுகளாக சினிமாவில் போட்டி நடிகர்களாக வலம் வருகின்றனர். ஜில்லா மற்றும் வீரம் போட்டிக்கு பிறகு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டதை போல இருவரும் போட்டியைத் தவிர்த்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் துணிவு மற்றும் வாரிசு படங்களின் மூலம் மிகப்பெரிய போட்டி உருவானது.

சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும், ரசிகர்கள் சண்டையை சமூக வலைதளங்களில் கண்டும் காணாதது போல இருந்தாலும், நிஜத்தில் இருவருமே நல்ல நண்பர்கள். பல முறை அஜித் வீட்டு விசேஷங்களுக்கு விஜய்யும் விஜய் வீட்டு விசேஷங்களுக்கு அஜித்தும் சென்றுள்ள புகைப்படங்களே வெளியாகி உள்ளன.

நேரில் சந்தித்து ஆறுதல்

லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகர் விஜய் கிட்டத்தட்ட 50 நாட்கள் காஷ்மீரில் முகாமிட்டு இருந்த நிலையில், தற்போது அங்கே படப்பிடிப்பு நிறைவு அடைந்து விட்டது. இந்நிலையில், சென்னை திரும்பிய நடிகர் விஜய் உடனடியாக அஜித்தின் அப்பா மறைவு செய்தியை கேட்டு நடிகர் அஜித்தை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் அப்பா சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக உயிரிழந்த நிலையில், அந்த செய்தியை அறிந்து நடிகர் விஜய் ரொம்பவே மனவேதனை அடைந்துள்ளார். இந்நிலையில், ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டுக்கு சென்ற விஜய் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு அஜித்துக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

விஜய் – அஜித் சந்திப்பு சில காலமாகவே தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நடிகர் அஜித்தை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் அஜித்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் சொல்லும் காட்சிகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித்தின் வீட்டுக்குள் விஜய்யின் கார் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *