திருமணமே செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இஞ்சி இடுப்பழகி

திருமணமே செய்யாமல் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த இஞ்சி இடுப்பழகி
  • PublishedMay 14, 2023

நடிகை இலியானா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது முதல் முறையாக கர்ப்பமான வயிற்றுடன் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையான நிலையில் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை இலியானா புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரோ நீபோன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவரை பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

அது மட்டும் இன்றி காத்ரினா கைஃப் சகோதரருடன் அவர் தற்போது டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை இலியானா திருமணம் செய்து கொள்ளாமல், திடீரென அவர் கர்ப்பமானதாக அறிவித்தார்.

இதனை அடுத்து அவருக்கு சக நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இருப்பினும் தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் கர்ப்பமாக இருக்கும் பேபிபம்ப் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை இலியானா தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இன்னும் ஆறு அல்லது ஏழு மாதத்தில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *