பொலிவுட்டிற்கு டப் கொடுக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் : குறுகிய காலத்தில் 100 கோடியை கடந்த வசூல்!

பொலிவுட்டிற்கு டப் கொடுக்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் : குறுகிய காலத்தில் 100 கோடியை கடந்த வசூல்!
  • PublishedMay 14, 2023

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேராள ஸ்டோரி திரைப்படம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்த படம் ஒன்பது நாள் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி  முதல் வாரத்தில் 81.15 கோடியும், இரண்டாவது வெள்ளிக்கிழமையில்,  12.23 கோடியும் வசூலித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று 19.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இந்த படம் மொத்தமாக இதுவரை 112.87 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.  பதான் மற்றும் தூ ஜூதி மைன் மக்காருக்குப் பிறகு 2023 இன் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்றாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *