ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி… அஞ்சலியின் சொத்து மதிப்பு.. ஆனால் அதற்கு மட்டும் இவ்வளவு செலவா?

ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி… அஞ்சலியின் சொத்து மதிப்பு.. ஆனால் அதற்கு மட்டும் இவ்வளவு செலவா?
  • PublishedJune 16, 2023

நடிகை அஞ்சலி நடிக்க வந்து தற்போது 17 வருடம் நிறைவடைந்த நிலையில், தனது 50-வது படமாக ஈகை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கினார்.

இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் அஞ்சலிக்கு சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அஞ்சலி, ஒரு படத்திற்காக 85 லட்சம் முதல் 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

இவர் சினிமாவில் மட்டுமல்ல வெப் சீரிஸ், விளம்பர படங்கள், கடை திறப்பு விழா என மாதம் அதிலிருந்து மட்டும் 8 லட்சம் வரை வருமானம் வருகிறது. இப்படி அஞ்சலி மொத்தமாக ஒரு ஆண்டிற்கு 1 கோடி வரை சம்பாதிக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க துவங்கிய பின்பு இதுவரை அவர் 12 கோடி வரை சொத்து சேர்த்துள்ளார்.

இவருக்கு ஹைதராபாத்தில் 2.5 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட்டும், சென்னையில் 2 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட்டும் இருக்கிறது. மிகவும் கார் மீது விருப்பம் கொள்ளும் அஞ்சலி தனக்கென ஒரு ஆடி கார், ஒரு பிஎம்டபிள்யூ காரையும் வைத்திருக்கிறார். இவற்றைத் தவிர வேறு எந்த சொத்து சுகமும் அஞ்சலிக்கு கிடையாது.

ஏனென்றால் இவர் மாதம் தோறும் பல லட்சங்களை மேக்கப் மற்றும் டிரஸ் போன்றவற்றிற்காகவே தண்ணியாக இறைக்கிறார்.

இதற்காகவே வருடத்திற்கு லட்சக்கணக்கான பணம் விரையம் ஆகிறது. மேலும் 32 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருக்கும் அஞ்சலியிடம் கேரியரா? அல்லது திருமண வாழ்க்கையா? என்ற கேள்வி சமீபத்தில் கேட்கப்பட்டது, அதற்கு இரண்டுமே எனக்கு அவசியம் என சொல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *