நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர். இவர் தந்தை மீது அதிக அன்புள்ளவர்.
இதனால் தான் தாய்.தந்தை பிரிவிற்கு பின்னரும் இன்னும் தன் தந்தை சரத்குமார் உடன் தொடர்பில் இருக்கிறார் வரலட்சுமி.
இவர் தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுடன் இணைந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்திருந்தார்.
இவர் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.
இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது,வசூலிலும் சிறப்பாக அமைந்தது.
இதனால் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
அவரது போல்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் தான் முன்னதாகவே சினிமாத்துறைக்கு வந்திருக்க வேண்டும் என்றும் அதை சரத்குமார் தான் தடுத்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஷங்கரின் பாய்ஸ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்புகள் கிடைத்ததாகவும் அந்த வாய்ப்பை தான் மிஸ் செய்ததற்கு தன்னுடைய தந்தை சரத்குமார் தான் காரணம் என்றும் வரலட்சுமி தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய தந்தைக்கு தான் நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும் அதனால் அவர் அதை அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சரத்குமாரிடம் கேட்டபோது வரலட்சுமி நடிக்க வருவது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னை மீறிதான் அவர் தற்போது நடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு படத்திலாவது நடிக்கட்டும் என்று தன்னுடைய முதல் மனைவியும் ராதிகாவும் வந்து வற்புறுத்தியதால் தான் வரலட்சுமி நடிக்க சம்மதித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மிகவும் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது தன்னுடைய எடையை சிறப்பாக குறைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
போடா போடி படம் வரலட்சுமிக்கு சிறப்பாக கைகொடுத்த நிலையில், அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
குண்டாக இருந்த அவர் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள் இயக்கத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
விஜய்யுடன் சர்க்கார் படத்தில் வில்லியாக மிரட்டலான கேரக்டரில் நடித்திருந்தார் வரலட்சுமி.
இதேபோல பாலா இயக்கத்திலும் தாரை தப்பட்டை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களிலும் தெலுங்கி பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் கன்னடத்திலும் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.
38 வயதான இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் வரண்பார்த்து வருகின்றனர்.
Post Views: 128