விக்கி – நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா?

விக்கி – நயன் குழந்தைகள் இவ்வளவு பெருசா வளர்ந்துவிட்டார்களா?
  • PublishedJune 9, 2023

நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஊரறிய திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே, வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவும் தயாராகி விட்டனர்.

திருமணமான நான்கே மாதத்தில், இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு… வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தங்களுடைய குழந்தைகளுக்கு உயிர் – உலகம் என வித்தியாசமான பெயர் சூட்டி உள்ள இருவரும், இன்று தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

குழந்தைகள் இருப்பதால், நயன்தாராவின் பிறந்தநாளை கூட வெளிநாட்டில் கொண்டாடாமல், தங்களுடைய சென்னையில் உள்ள வீட்டிலேயே கொண்டாடிய இந்த ஜோடி, தற்போது திருமண நாளையும் அதேபோல் வீட்டிலேயே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நேற்று இரவே நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட நிலையில், இதைத்தொடர்ந்து உயிர் – உலகம் இருவரும் தங்களுடைய பெற்றோரான, நயன் – விக்கிக்கு வாழ்த்து கூறும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படத்தில் உயிர் – உலகம் இருவரும் திரும்பி நிற்பது போல் உள்ளது. மேலும் அதற்குள் இவ்வளவு பெருசா நயன் விக்கியின் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா? என ரசிகர்கள் பலர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *