அம்மாவுக்கான அதை மாற்றுவாரா விஜய் தேவரகொண்டா?? தீயாய் பரவும் செய்தி

அம்மாவுக்கான அதை மாற்றுவாரா விஜய் தேவரகொண்டா?? தீயாய் பரவும் செய்தி
  • PublishedJune 11, 2024

தென்னிந்திய ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டா தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டா, அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் போன்ற படங்களில் நடித்து.. தனக்கென ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிர்வை உருவாக்கியவர்.

நேசனல் கிரஷ் ராஷ்மிகாவுடன் காதல் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ராஷ்மிகாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய பின்னர் தான் விஜய் தேவரகொண்டாவுக்கு எந்த படமும் ஹிட்டாக மாட்டேங்குது என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது.

உண்மையை சொல்ல போனால், கீதா கோவிந்தம் படம் தான்… வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது, டாக்ஸிவாலா சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லிகர்’ படு தோல்வியை சந்தித்தது.

அதே போல் குஷி மற்றும் சமீபத்தில் வந்த ஃபேமிலி ஸ்டார் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தன்னுடைய மாஸ் இமேஜை தக்கவைத்து கொள்ள கண்டிப்பாக ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் விஜய்.

மேலும் விஜய் தேவரைக்கொண்ட படங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது குறித்து அவரது ஜாதகத்தை, அவரின் அம்மா குடும்ப ஜோசியரிடம் காட்டிய போது… ஜாதகப்படி அவருடைய பெயரை மாற்றம் செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளதாகவும், எனவே தன்னுடைய தாயாருக்காக பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரம் இவரின் பெயருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு வைப் உள்ள நிலையில்… இப்படி ஒரு முடிவை விஜய் கண்டிப்பாக எடுக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *