பிள்ளையார் சுழி போட்டாச்சு… மக்களே “பிக்பாஸ் சீசன் 8” நீங்க தயாரா??

பிள்ளையார் சுழி போட்டாச்சு… மக்களே “பிக்பாஸ் சீசன் 8”  நீங்க தயாரா??
  • PublishedJune 11, 2024

பிக்பாஸ் சீசன் 7 ஜனவரி மாதத்துடன் முடிவடைந்த நிலையில்… தற்போது சீசன் 8 குறித்த பேச்சு வார்த்தைகள் துவங்கி விட்டதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 1 எப்படி மிகவும் பரபரப்பாகவே இருந்ததோ… அதே போல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் ஓவ்வொரு நாளும் ரணகளமான நாட்களாகவே சென்றது.

ஆனால் இந்த சீசனில் யாரும் எதிர்பாராதது என்றால் அது அர்ச்சனாவுக்கு கூடிய ரசிகர்கள் கூட்டத்தை தான். அவர் காசு கொடுத்து இது போல் செய்கிறார் என்கிற விமர்சனம் வந்த போது கூட அதற்க்கு தக்க பதிலடி கொடுத்தார்.

மாயாவை பின்னுக்கு தள்ளி டைட்டில் பட்டத்தையும் பெற்றார். முதல் ரன்னரப்பாக மணி சந்திரா மாறிய நிலையில், இரண்டாவது ரன்னரப்பாக மாயா மாறினார்.

குக் வித் கோமாளி முடிந்த கையேடு இதை துவங்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாம். இதற்காக ஒரு காதல் ஜோடியை… பிக்பாஸ் குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் வேறு யாரும் இல்லை யூடியூப் பிரபலமும், நடிகருமான TTF வாசன் மற்றும் அவரின் காதலி சோயா ஷாலினை தான். சோயா ஷாலினி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சோயாவிடம் ஏற்கனவே விஜய் டிவி குழு பேசிவிட்ட நிலையில்… அவர் மூலம் TTF வாசனையும் அணுகி இருவரையும் ஜோடியாக உள்ளே போட்டு, ஒரு ரொமான்டி படம் ஓட்டும் ஐடியாவில் இப்படி ஒரு பிளான் போயுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *