அப்பா விஜய்யுடன் மோதும் மகன் விஜய்.. அதிரடி ஆக்சன் களத்தில் கோட்

அப்பா விஜய்யுடன் மோதும் மகன் விஜய்.. அதிரடி ஆக்சன் களத்தில் கோட்
  • PublishedJune 12, 2024

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மற்றும் திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.

கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். படத்தில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. படம் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது அப்பா மற்றும் மகன் விஜய்யின் சண்டை காட்சி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. கோட் படத்தின் கிளைமாக்சில் அப்பா மற்றும் மகன் விஜய் இருவரும் பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் களத்தில் சண்டையிடுவதாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.

ஆங்காங்கே வைக்கப்படும் வெடிகுண்டுகளை அகற்ற அப்பா விஜய் களமிறங்குவதாக காட்சிகள் அமைந்துள்ளதாகவும் இந்த காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

படத்தில் விஜய் மற்றும் மோகன் இடையிலும் அதிரடி சண்டை காட்சிகள் உள்ள சூழலில் அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் விஜய் மற்றும் விஜய் இடையில் கிளைமாக்சில் இந்த சண்டை காட்சி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த நாளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். மேலும் அன்றைய தினம் தளபதி 69 படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசி படங்களாக அமைய உள்ள இந்த படங்களின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் காட்டி வருவது குறிப்பிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *