இதுவரை செய்யாத ஒன்றை லியோ படத்தில் செய்த விஜய்! மிரண்டு போன லோகேஷ்
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் படங்களை பொறுத்த வரைக்கும் எப்போதுமே காதல் காட்சிகள் மற்றும், அறிமுக பாடல்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் லியோ படத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சியை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த பாடலுக்கு மட்டும் 2000 டான்ஸர்களை ஆட வைக்க வேண்டும் என்பதுதான் படகு குழுவின் மிகப்பெரிய மாஸ்டர் பிளான். கண்டிப்பாக இதை தியேட்டரில் பார்க்கும் பொழுது ரொம்பவே பிரம்மிப்பாக இருக்கும்.
2000 டான்ஸர்கள் என்னும் பொழுது கண்டிப்பாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலங்களில் இருக்கும் டான்ஸர்களையும் வர வைக்கலாம் என்று தயாரிப்பு குழுவும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால் தளபதி விஜய் அதெல்லாம் எதுவுமே தேவையில்லை டான்ஸர்கள் எல்லோரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கட்டும். ஆள் இல்லை என்றால் நடனப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அழைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.
இதனால் இந்த அனுபவம் அந்த மாணவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை கொடுக்கும் என்பதுதான் விஜய்யின் திட்டமாம். விஜய் இதுவரைக்கும் அவர் நடித்த படங்களில் படக்குழு திட்டமிடும் எந்த ஒரு விஷயத்திலும் தலையிட்டு தன்னுடைய கருத்தை சொல்ல மாட்டாராம்.
இதுதான் விஜய் முதல் முறை தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். இது தயாரிப்பு குழுவில் இருந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கூட ஆச்சரியமாக இருந்ததாம்.