அஜித், விஜய்க்கு பிறகு உள்ள 5 ஹீரோக்கள் : வருடத்திற்கு அதிக படங்களில் கமிட்டாகும் அந்த ஹீரோ!

டாப் ஹீரோக்களான அஜித், விஜய் படங்கள் என்றாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி விடுகிறது. இருப்பினும் இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்தவகையில், அஜித், விஜய்க்கு அடுத்தப்படியாக இருக்கக் கூடிய 5 ஹீரோக்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்பு: தன் உடல் எடையால் வாய்ப்பு இழந்து காணப்பட்ட இவர் ஒரு இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார். இதனையடுத்து வெந்து தணிந்தது காடு, மாநாடு, பத்துதல படங்கள் இவருக்கான இடத்தை மீண்டும் தக்கவைத்தது.
சூர்யா: தன் மாறுபட்ட கதாபாத்திரத்தில் களம் இறங்கினார் ரோலக்ஸ். இது அவருக்கு நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது. மேலும் தற்போது சோசியல் மீடியாவில் இவரின் கங்குவா வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் வாடி வாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.
தனுஷ்: சமீபத்தில் வெங்கியின் இயக்கத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்த படம் தான் வாத்தி. இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்: 2021ல் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் டாக்டர். இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவான படங்கள் தோல்வியை தழுவின. தற்போது மாவீரம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி: விக்ரம் படத்தில் இவரின் மாறுபட்ட நடிப்பு மக்களின் வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் கால்ஷீட் கொடுத்து வருகிறார். மேலும் தன் திறன் பட்ட நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதுவரை 12 படங்களில் இவர் கமிட்டாகி இருக்கிறார்.